பக்கங்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி?


காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி?


காய்கறி வாங்குவது எப்படி? உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும் அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது சல்ல‍ மக்காச்சோளம்.
6.தக்காளிதக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக் கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

செல்லோ டேப் தயாரிப்பு


செல்லோ டேப் தயாரிப்பு


பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமாகடித உறைகளை ஒட்டணுமா?படங்களை சுவரில் ஒட்டணுமாஇல்லைகுழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப்புத்தகத்தை ஒட்டணுமாஎல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோடேப்அதுமட்டுமல்லடெக்ஸ்டைல்ஸ்தோல் பொருட்கள்ஹார்டுவேர் போன்றபல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப்பயன்படுகிறதுஅவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பதுகுறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்...

சந்தை வாய்ப்பு!
ஸ்டேஷனரி கடைகள்ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரியபெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும்.செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது.தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகி இருக்கும் சந்தைவாய்ப்பும் அதிகம்எனவேபுதிதாக இத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்லவாய்ப்பாக அமையும்.
முதலீடு!
குறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல்கோடிக் கணக்கில் இதில் முதலீடு செய்யலாம்.ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடுதேவை.

மூலப் பொருள்!

ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம்அடிசிவ்இந்த இரண்டும்தான் முக்கிய மூலப்பொருட்கள்போட்டோ ஃபிலிம் போல இருக்கிறது இந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம்.அப்படியே ரோல் ரோலாகக் கிடைக்கிறதுஇந்த மூலப் பொருள் போபால் மற்றும்சென்னையிலும் கிடைக்கிறதுமேலும்அடிசிவ் என்பது பசைமுன்னணிநிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

கட்டடம்!
இயந்திரங்களைப் பொறுத்து வதற்குதயார் செய்த செல்லோ டேப்களை ஸ்டோர்செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும்.சொந்தமாகவோவாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.

இயந்திரம்!
கோட்டிங் இயந்திரம்ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (sliving) இயந்திரம்இந்தமூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள்இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்புயூனிட்டை தொடங்கிவிடலாம்மேலும்கூடுதலாக கலர் பிரின்டிங் இயந்திரம்செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிட பயன்படுகிறதுகோட்டிங்ஸ்லைட்டிங்மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும்அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன.இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில்கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும்இந்த பசைஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட்வெப்பநிலையில் சூடுபடுத்தினால்செல்லோ டேப்பாக வந்துவிடுகிறதுகாட்டன்,நைலான்பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம்.செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம்வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில்'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.
மேலும்செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர்பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப்கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.
வேலையாட்கள்!
திறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5, மேனேஜர்-1,சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2 என மொத்தம் 14 நபர்கள்தேவைப்படுவார்கள்.

பிளஸ்!
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும் இன்றியமையாத விஷயம்.எனவேஇதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்தவிரஅதிகஅளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.
மைனஸ்!
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்தவிர,வாங்கும்போது ஒரு விலைவாங்கிய பிறகு வேறொரு விலை என அதிகரிக்கவும்வாய்ப்புண்டுஇதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
பலருக்கும் தெரியவராத தொழில் இதுபோட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பதுகூடுதல் சிறப்புஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால்நிச்சயம் ஜெயிக்கலாம்